பகவான் ஸ்ரீ ராமர் வணங்கிய சிவலிங்கம் எங்கே உள்ளது தெரியுமா?

பகவான் ஸ்ரீ ராமர் தனது மனைவி சீதாதேவியை இராவணன் கடத்திக் கொண்டு சென்ற பிறகு பல்வேறு சிவாலயங்கள் சென்று சிவபெருமானை தீவிரமாக வணங்கினார் என்பது புராண வரலாறு..

அவ்வகையில் அவர் தமிழகத்தில் உள்ள பல சிவாலயங்களுக்கு சென்று சிவ தரிசனம் செய்திருக்கிறார். அப்படி அவர் வந்த ஒரு இடம் தான் திருவதகை வீரட்டானேஸ்வரர் திருக்கோவில்.

இந்த வீரட்டானேஸ்வரர் திருக்கோவிலில் பகவான் ஸ்ரீ ராமபிரான் வணங்கிய சிவலிங்கம் வைத்து பூஜிக்கப்படுகிறது. இந்த கோவில் எங்கே இருக்கிறது என்றால்? அஷ்டவிரட்டானங்களில் ஒரு வீரட்டானமான திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் இந்த சிவலிங்கம் உள்ளது. 

விளம்பரம் -



திருவதிகை வீரட்டானேஸ்வரர் திருக்கோவிலில் மூலவருக்கு பின்புறமாக பல மகான்களும் பல கடவுள்களும் வணங்கிய லிங்கங்கள் வரிசையாக வைக்கப்பட்டு பொதுமக்களாலும், குருக்களாலும் பூஜிக்கப்படுகிறது..

அந்த இடத்தில் தான் பகவான் ஸ்ரீ ராமர் வணங்கிய சிவலிங்கமும் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. 

விளம்பரம் -


பகவான் ஸ்ரீராமரின் பிரச்சினையை சரி செய்வதற்கு உதவிய இந்த லிங்கம் நமது பிரச்சனைக்கும் ஒரு நல்ல தீர்வை கொடுப்பார் என்பது இங்குள்ள மக்களின் மிகப்பெரிய நம்பிக்கை ஆகும். 

பொதுமக்கள் பலரும் இந்த ஸ்ரீராமபிரான் வணங்கிய லிங்கத்தை பயபக்தியுடன் வணங்கி செல்வதை பார்க்க முடிகிறது. 

இந்த சிவலிங்கத்தை நீங்கள் பார்க்க விரும்பினால் கீழே வீடியோ தொகுப்பாக கொடுத்துள்ளேன். கீழே உள்ள லிங்கை கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் பகவான் ஸ்ரீ ராமர் வணங்கிய சிவலிங்கத்தை கண்டு வணங்கி சிவபெருமானின் அருளை பெறலாம்.

நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏






Comments