நாய் வடிவில் வந்து தமது குருவை வணங்கிய சித்தர்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ளது திருவதிகை எனும் அழகிய கிராமம். இந்த கிராமத்தில் அட்டவிரட்டானங்களில் ஒரு வீரட்டனமான வீரட்டானேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது மிகப் பெரிய சிறப்பாகும். 

விளம்பரம் - 


இக்கோவிலின் சிறப்புகளை கூற வேண்டும் என்றால் இன்று ஒரு நாள் போதாது... ஆனால் நீங்கள் இந்த பதிவில் பார்க்க இருப்பது திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் பற்றி அல்ல... வீரட்டானேஸ்வரர் கோவிலின் பின்புறம் அமைந்துள்ள ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் ஆலயத்தை பற்றிய ஒரு சிறு தொகுப்பு தான் இந்த பதிவில் நீங்கள் பார்க்கவிருக்கிறீர்கள். 

இந்த சுப்பிரமணிய தேசிகர் ஆலயத்தை பற்றி பல்வேறு பதிவுகள் நாம் ஏற்கனவே நமது வலைதளத்திலும் சமூக வலைதளத்திலும் பதிவிட்டுள்ளோம். 

அந்த வகையில் இந்த பதிவில் நீங்கள் என்ன பார்க்க இருக்கிறீர்கள் என்றால் நேற்று இரவு யாம் சுப்பிரமணிய தேசிகர் ஆலயத்திற்கு சென்றிருந்தோம் அப்பொழுது பல நிமிடங்கள் ஒரு பைரவர் அதாவது நாய் மூலவருக்கு நேர் எதிரே அமர்ந்தவாறு ரோட்டில் இருந்தபடி வைத்த கண் வாங்காமல் எதையோ பார்த்துக் கொண்டிருப்பதை யாம் பார்த்தோம்... 

விளம்பரம் -

என்னடா இது இப்படி எதை பார்த்துக் கொண்டிருக்கிறது என்று யோசித்தவரே அந்த நாயின் அருகில் வந்த போது அந்த நாய் சிறு அசைவும் இல்லாமல் மூலவரை பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தேன்... 

பல நேரங்களில் சித்தர்கள் மாற்று உருவில் வந்து அவருக்கு குருவாக விளங்கியவர்களை வணங்குவது உண்டு. பல இடங்களில் இதுபோன்று நாம் பார்த்திருக்கிறோம் அதேபோல் இந்த பைரவர் வடிவில் உள்ள சித்தர் தமது குருநாதரான சுப்பிரமணிய தேசிகரை வணங்குவதாகவே எம் உணர்ந்தோம் கிட்டத்தட்ட 20 நிமிடத்திற்கு மேல் உட்கார்ந்து இடத்தில் இருந்தபடியே கண்களை முடியும் கண்களை திறந்தும் மூலஸ்தானத்தை பார்த்தவரே உக்காந்திருந்த பைரவரை சித்தர் என்று கூறாமல் வேறு எப்படி கூற முடியும்? .. 

சித்தர்கள் எந்த ரூபத்திலும் இருப்பார்கள் என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையா என்ன இந்த காட்சியை நீங்கள் காண வேண்டும் என்றால் கீழே உள்ள லிங்கில் கொடுத்திருக்கிறோம் லிங்கை கிளிக் செய்து வீடியோ தொகுப்பை கண்டு இறைவனின் ஆசிர்வாதத்தை பெற்றுக் கொள்ளவும் 🙏 

நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏 



Comments