கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோவில் வரலாறு


கொல்லிமலை என்றாலே சிறு வயது முதல் நமக்கு லேசான பயம் வருவதை மறுக்க இயலாது.. ஏனெனில் கொல்லிமலையை பற்றிய நாம் இதுவரை கேட்ட செய்திகள் அது போன்றவை.. 

கொல்லிமலையில் பல வினோதமான மனிதர்கள் நடமாடுகிறார்கள் வைப்பு பில்லி சூனியம் ஏவல் இது போன்ற மாந்திரீக செயல்கள் செய்பவர்கள் அங்கே உலாவி வருகிறார்கள்! 

அங்கே சக்தி வாய்ந்த எட்டுக்கை அம்மன் கோவிலில் மாசி பெரியசாமி கோவிலில் அறப்பளீஸ்வரர் கோவிலிலும் மேலும் பல சிறு தெய்வ கோவில்களும் உள்ளன என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். 

அப்படி என்னதான் இந்த கொல்லிமலையில் உள்ளது?  என்ற ஆவலுடன் நான் சென்ற முதல் பயணம் இன்று வரை என்னால் மறக்க முடியாது அவ்வளவு வினோதங்களை நான் சந்தித்தேன்... 

இதுவரை கொல்லி மலைக்கு யான் எத்தனை முறை சென்றிருக்கிறோம் என்று எனக்கு நினைவில் வைத்துக்கொள்ள இயலவில்லை ஏனெனில் என் வாழ்நாளில் அதிக முறை சென்ற இடம் என்றால் அது கொல்லிமலையை நான் சொல்வேன். 

எமது அனுபவங்களை மொத்தமாக தொகுத்தால் குறைந்தது இரண்டு மூன்று புத்தகங்களை எழுதலாம் கொல்லி மலையை பற்றி அந்த அளவிற்கு அனுபவங்கள் உள்ளது. நமது சிவா விஷ்ணு டிவி சார்பாக கொல்லிமலையில் சுமார் 10 நாட்களுக்கு மேல் தங்கி பல்வேறு வகையான செய்திகளை சேகரித்து உள்ளோம் அவ்வகையில் இந்த பதிவில் அறப்பளீஸ்வரர் கோவில் வரலாறு பற்றியும் பொதுவாக கொல்லிமலை வரலாறுகளையும் அறப்பளீஸ்வரர் கோவிலில் பணிபுரியும் குருக்கள் திரு மணிகண்டன் அவர்கள் கூறுகிறார்கள்! 

கீழே உள்ள வீடியோ தொகுப்பில் திரு மணிகண்டன் அவர்கள் கொல்லிமலையை பற்றிய அதிர்ச்சிகரமான பல தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொண்ட வீடியோ தொகுப்பு உள்ளது விருப்பமுள்ளவர்கள் வீடியோவை கிளிக் செய்து பார்க்கலாம்.

 ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏




Comments